பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 88 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பழக்கம், எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. என்ற உண்மையை, உங்கள் குறளால் புரிந்து கொள்ள முடிகிறது என்றேன்.

எங்கள் காலத்தில் கள் இருந்தாலும், அது தருகின்ற போதையும், வருகிற வீரமும், தருகிற திறமையும் போதவில்லை என்று, புதிது புதிதாக போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, உண்டு மகிழ்கின்றார்கள். அவர்களுக்குத் தண்டனையும் உண்டு என்று நான் கூறியவுடன், அவர் புன்னகைத்தார்.

வீரர்களாக விளங்குபவர்களுக்கு உண்மைதான் விளக்கமாக இருக்கும். அவர்கள் பொய் பேசு வதையே இழிவாக எண்ணுவார்கள். இதை போன்ற பல பண்புகளுக்கு உரியவர்கள் தான் வீரர்கள், என்னும் சில குறள்களைக் கூறினார்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (299)

பொய் பேசாத பேராண்மை, வீரர்களுக்கே உண்டு. அதைவிட இன்னொரு பேராண்ம்ை இருக்கிறது. அதுதான் பிறருடைய மனைவியை ஏறெடுத்துப் பார்க்காத, விரும்பாத, நயக்காத “பண்பு. காம உணர்விலும் கண்ணியம் காக்கும் வீரம் அது. -------- “ --