பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்  ?

அவரவர் உடல் தகுதியை திறமையை அறிந்து கொள்ளவும்; அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது போல் போட்டியிட்டு, ஆற்றல் மிகுந்தவர் யார் என்று அறிந்து கொள்ள வாய்ப்பு பெறவும் உதவுவதற்காக என்றேன்.

எங்கள் காலத்து நிலையும் இப்படித்தான் இருந்தது என்று கூறிக்கொண்டே நடந்தார். அவர் எதிரே, பசுமையாகத் தோன்றிய தரைப்பகுதியும், பச்சைப்பசேல் என்று பறை சாற்றிக் கொண்டு, நின்று நிமிர்ந்து, கிளை விரித்தாடிய மரங்கள் கூட்டமும் அவரைக் கவர்ந்திழுத்தன போலும்.

இப்போது நாம் எங்கிருக்கிறோம் என்றார்.

விளையாட்டுக்களுக்கும் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை ஒரு கல்வி யாகக் கற்றுத்தரும் ஒரு கல்லூரி வாசலிலே நிற்கிறோம் என்றேன்.

விளையாட்டுக்கும் ஒரு கல்லூரியா என்று. வியந்தவாறே கேட்டார் வள்ளுவர்.

நீங்கள் ஆச்சரியமாகக் கேட்பது எனக்கு ஆச் சரியமாகப் படவில்லை. இந்த காலத்து மக்களே, விளையாட்டுக்கு ஒரு கல்லூரியா என்று கேட்கி றார்கள். அந்த அளவுக்கு விளையாட்டு அறிவு” விரிந்து கிடக்கிறது என்றேன்.

வள்ளுவர்-9