பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இருவரும் நடந்து கல்லூரிக்குள் நடந்தோம். இந்தக் கல்லூரியைப் பற்றி, கொஞ்சம் விளக்க மாகக் கூறுகிறேன் என்றேன். தலையசைத்தபடி, ஆர்வமுடன் நடந்தார்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்னே விளை யாட்டில் ஆர்வமுள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர். ஹரிகுரோபக் என்று பெயர். தங்களுடைய கிறித்தவ மத சேவைக்காக நம் நாட் டிற்கு வந்து, இங்கு இந்தக் கல்லூரியை ஆரம்பித் தார். இன்று, இந்தக் கல்லூரி, உலகத்திற்கு உடற் கல்வி ஆசிரியர்களை உருவாக்கி வழங்கும் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

நம் தமிழகத் தலைநகராக விளங்கும் சென்னை மாநகரில், இப்படிப்பட்ட செழிப்புள்ள பிரதேசம் எங்குமே இல்லை என்றேன்.

நீங்கள் கூறுவது உண்மைதான்; காண்பதற்குக் கவர்ச்சி மிக்க இடங்கள், காளைகளும் கன்னியரும் வந்து, தங்கள் உடல் செழிப்புக்கும், மன வளர்ச்சிக் கும் முயற்சிக்கும் விளையாட்டு இடங்கள், இந்த காட்சி என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது என்றார்.

அரை கோடி மக்கள் வாழ்கிற நம் தலைநகரில், இதுபோல இன்னொரு இடம் இல்லையே? மக்கள் வளமையான வாழ்வுக்கு வழிகாட்டும் புகலிடம்