பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 139

வேறொன்றுமில்லையே என்பதுதான் என் வருத்தம் என்றேன்.

மக்கள் ஆடுகிற விளையாட்டிடங்களை நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்? அங்கே என்னவோ புது மொழியில் எழுதப்பட்டிருக்கிறதே என்றார். பல வகையான கைப்பந்தாட்ட, கூடைப்பந்தாட்ட, கால் பந்தாட்ட இடங்கள் அவரைக் கவர்ந்து விட்டன போலும்.

விளையாடும் இடங்களை ஆங்கிலத்தில் Play field என்று கூறுவார்கள். நமது நாட்டில் நம் தாய் மொழி தமிழைவிட, அந்நிய மொழியான ஆங்கில மொழியே, முதல் மொழியாக இங்கு விளங்குகிறது.

தமிழ் தெரிந்த சான்றோருக்கும் இங்கே மதிப்புமில்லை. மரியாதையுமில்லை. அரை குறை -யாக அந்நியமொழியைத் தெரிந்த, அதில் உளறுகிற ஆட்களுக்குத்தான் மதிப்பு அதிகம், கெளரவம். அதிகம் என்றேன்.

தமிழ் மொழிக்கு, நம் தாய் மொழிக்கு இவ்வளவு தான் மரியாதையா என்றார்.

இங்கே நீங்கள் காணுகிற விளையாட் டெல்லாம், வேறு நாட்டிலிருந்து இறக்குமதி: