பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 40 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

யானவைகள் தாம். இந்த விளையாட்டில் பேசப் படுகிற சொற்கள் எல்லாம், அந்நிய மொழியான ஆங்கில மொழியிட்டப் பிச்சைகள்தாம்.

அவற்றை நம் தமிழில் சொன்னால், நம்: தமிழர்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழிலே சொல்ல வேண்டாம். ஆங்கிலத் தில் சொல்வதே பெருமை என்கின்றனர். -

தாய் மொழிப்பற்றில்லாத, தரமில்லாத மக்கள், நம்மிடையே இருக்கின்றார்களா ? அவருக்கு அது மிக வேதனையை அளித்தது. போலும். தலையை தாழ்த்திக் கொண்டார். பெரு. மூச்சும் வந்தது.

தமிழ் சொற்களை மட்டுமா இகழ்கின்றார் கள் : தமிழ் மொழியில் விளையாட்டுபற்றிய சொற்கள் இருக்கிறது என்று கூறினாலும். அதை ஏற்காது, தமிழையே தாழ்த்திப் பேசுகின்றார்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்னே, அந்நிய மொழி யில் தோன்றிய சொற்களுக்கு இணையாகவே அல்ல, முதலாகத் தோன்றும் நம்தமிழ் மொழியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நிறைய சொற்கள் இருக்கின்றன என்று நான் கூறுவதை, நம்பாத மக்களே நிறைய பேர்கள் நம்மிடையே இருக் கின்றார்கள் என்றேன்.