பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் . A 41

நீங்கள் கூறிய ஓரிரு சொற்களைக் கூறுங் களேன். கேட்கிறேன் என்றார்.

ஆடுகளம்.

இங்கே விளையாட்டுக்களை விளையாடுகிற இடங்களை, விளையாட்டு மைதானங்கள் என் கிறார்கள் நம்மவர்கள். ஆங்கில மொழியில் அதை Play Field என்கிறார்கள். அதை நாம் நேரடியாகத் தமிழில் கூறினால், விளையாட்டுக் களம் என்ற பொருள் வருகிறது.

இந்த விளையாட்டுக்களத்தை நான் ஆடுகளம் என்று கூறினேன்.

ஆடுகளம் என்றால், ஆடுகிற களம். ஆடுகிற தொழில் செய்யும் களம்: பயன் கொள்ளும் இடம்; புடைபெயரும் களம் என்றெல்லாம் பொருள் உண்டு. ஆமாம். ஆடு என்கிற வார்த்தைக்கே வெந்றி என்கிற பொருளும் உண்டு.

இந்தச் சொல் புறநானூறு எனும் நூலில் வருகிறது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனும் தமிழ்ப்புலவர், சோழன் நலங்கிள்ளி எனும் மாவேந்தனைப்பற்றி பாடுகிற போது ஆடுகளம் என்ற சொல்லை அருமையாகப் பயன்படுத்தியிருக் கிறார் (புறநானூறு பாடல் 28). அதில் வருகின்ற