பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அழகுக் காட்சியை உங்களுக்கு விவரிக்கிறேன். என்றேன். சம்மதம் தெரிவித்தார்.

சோழன் நலங்கிள்ளியே! உன்னுடைய பகைவர்கள் உனக்குப் பயந்து புற முதுகுக் காட்டி, உயிர் தப்ப காட்டுக்கு ஒடி விட்டனர். காட்டுச் சேவல் குரல் கொடுக்க, வயல்களைக் காப்பவர்கள் விழித்துக் கொள்ள, பகைவர்கள் பசி தீர்க்கக் கரும்பு கேட்க, அவர்களோ கரும்பைப் பிடுங்கி: வேலிக்கு வெளியே எறிய; அதனால் குளத்தில் உள்ள தாமரைப்பூக்கள் அதிர்ச்சிபெற, அதிலிருந்து தேன் பொழிய; அந்தக் குளமே அதிர்த்தெழுந்த தால், அலைகள் புரண்டோட, கூத்தர்கள் ஆடுகின்ற ஆடுகளம் போல, அந்தக் குளம் காட்சி யளிக்கிறது என்று பாடுகின்றார்.

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோ புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அகநாட்டையே” (புறம் 28)

ஆகவே, கூத்தாடுபவர்கள் நின்று ஆடுகின்ற ஆடுகளம் போல என்று கூறிய உவமைச் சொல்லே, இங்கு நாம் காணுகின்ற விளையாட்டு இடங்: களுக்குப் பொருந்துகிறது என்றேன்.

உண்மைதான். கூத்தர்கள் நடனம் ஆடு கின்றார்கள். இங்கே காளையர்களும் கன்னிய