பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 143

களும் பந்தினை ஆடுகின்றார்கள். இயக்கம் ஒன்று தான். பொருத்தமான சொல்லே என்றார்.

ஆடரங்கம்

அங்கே பாருங்கள். அந்த மண்டபமும், விளை யாடுவற்காகத் தான் பயன்படுகின்றது. மழை, வெயில், பணி, புயல் என்று இயற்கை சீறுகின்ற போது, விளையாடும் முயற்சிகளைத் தொடர் வதற்காகப், பத்திரமாகக் காத்து நிற்கும் இடம் தான் அது.

இந்த விளையாடும் இடத்தை ஆங்கிலத்தில் INDOOR என்கிறார்கள். Gymnasium என்கிறார்கள். அதற்குத் தமிழில், சுற்றிலும் பாதுகாக்கப்பட்டி விளையாட்டிடம், உள்ளே ஆடுகிற இடம் என்று அர்த்தம் வருகிறது.

இதனை விளையாட்டரங்கம், உள்ளாடும் அரங்கம் என்றெல்லாம் தமிழில் கூறுகிறோம்.

ஆனால், இந்த விளையாட்டரங்கம் என்னும் சொல்லுக்கும் மேலாக. மேன்மையான ஒரு சொல் தமிழ் மந்திரத்தில் இருக்கிறது. ... }

திருமத்திரத்திலா என்றார் வள்ளுவர்.

ஆமாம், அந்தத் தமிழ் மாமுனிவர், தனிப் பெரும் சித்தர், திருமூலர்தான், மிக அருமையான