பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் . 5

வெளிப்புறத்தில், எந்த விதமான அரணமைப்பு

இல்லாத வெளியிடத்தில், நிகழப் பெறுகிற விளை

யாட்டு இடத்திற்கு ஆடுகளம் என்ற பெயரும்:

சுற்றிச் சுவரமைப்பும் மேற்கூரையும் கொண்டி தாகத் திகழும் விளையாட்டு இடத்திற்கு ஆடரங்கம் என்ற பெயரும் எவ்வளவு அருமையாகப் பொருந்தி வருகிறது பார்த்தீர்களா என்றேன்.

பரந்த இடத்தில் நிகழும் போர்க்களத்தை நாங்கள் அடுகளம் என்றோம். இங்கே பரந்த இடத்தில் போரிடுவது போல விளையாடும் இடத்தை ஆடுகளம் என்பது பொருத்தம் தானே என்றார்.

என் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்படி கொஞ்ச நேரம் அமரலாமா என்று கேட்டுக் கொண்டே ஓரிடத்தைத் தேடினார்.

அதோ அங்கே செல்லலாம் என்று, நிழல் மிகுந்த இடம் ஒன்றைக் காட்டினேன்.

தமிழ் கூறும் நல்லுலகத்தின் தரையில் அமர்கிற போது, என் நெஞ்சம் ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கிறது. இந்த மண்ணில் மீண்டும் வந்து, இந்த புண்ணிய பூமியில் நடக்க, உட்கார, நான் பெற்ற பேறு, பெரும் பேறுதான் என்றார் வள்ளுவர்.