பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறு முன்னுரை

இந்த இனிய நூலை எழுதுவதற்காக வள்ளுவரை எனக்காகப் பயன்படுத்திக் கொள்ள மூைைந்தேன். முயன்றேன். முடியவில்லை. நான் தான் அவரால் பயன்பட்டுக் கொண்டேன்.

கண்கள் படும் இடத்தில், கைக்கெட்டுகிற தூரத்தில், திருக்குறளை வைத்துக் கொண்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலை எடுத்தேன். குறளைப் பிரித்தேன். படித்தேன்.

குறள்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த் தேன். செய்திகளைத் திரட்டிப் பார்த்தேன். நுணுக்கங்களை விரட்டிப் பார்த்தேன்.

“எத்தனைதான் முயன்றாலும், ஒவ்வொரு முறை குறளைப் படிக்கிற போதும், ஒவ்வொரு