பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அறிந்த போது, வீரப் பண்புகளே விவேகமாக மாறும் என்று கருத்துக்குப் பொருத்தமான சான் நாக, வள்ளுவர் விளங்குகிறார்.

சாதாரணமான உயிர் ஜீவிகளை மனிதர் என் கிறோம். ஆண்மையும் ஆற்றலும் உள்ளவர்களை வீரர் என்கிறோம். வீரச்செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுபவர்களை ஆடவர் என்கிறோம்.

ஆடவராக இருப்பதுடன், அரும் பண்பு களிலும், தூய்மையானவர்களாக விளங்குபவரை சான்றோர் என்கிறோம்.

இத்தகைய எழில் நலங்கள் மிகுந்த பொழிலாக, பண்புகள் நிறைந்த கோயிலாக, வள்ளுவர் விளங்கி யிருந்ததால்தான், அவரது குறள்களும் பண்புகளின் பேரூற்றாக விளங்கி வருகின்றன. o

வள்ளுவர் தீயதையெல்லாம் சாடுகிறார். அறம் அல்லாதனவற்றை யெல்லாம் அகற்றுமாறு ஆணையிடுகிறார். பண்பாடற்ற செயல்களை செய் யக் கூடாது என்பதை விட, நினைப்பதே பாவம் என்று நெருப்பாகப் பேசுகிறார்.

அவர் எந்தக் கருத்தைக் கூற வந்தாலும், அதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார். அவர் கருத்தை நிலைப்படுத்தக் கூறுகிற உவமைகளை