பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பெயரும் பெருமையும்

வள்ளுவரின் பெயர் நெடுமாறன் என்றும்: அவர் வாளெடுத்து போர் புரியும் தொழிலில் வல்லவரென்றும்; அரசருக்கு உதவுகின்ற உள் மந்திரத் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்றக் குறிப்பையே, இங்கு நாம் முக்கியக் குறிப்பாகக் கொள்ள வேண்டும். -

தமது வாழ்நாள் தொழிலாக மேற் கொண்டு வாழ்ந்த வீரத் தொழிலில் விளைந்த அனுபவமும்; அதனால் அடைந்த ஞானம் மிகுந்த தெய்வ அறிவும் நிறைந்தவராக இருந்தமையால் தான். இத்தகைய விவேகமுள்ள சிறந்த நூலை வள்ளுவரால் இயற்ற முடிந்தது.

வள்ளுவர் வாழ்க்கை

வள்ளுவரின் வாழ்கையைப்பற்றி விளக்க வந்தவர்கள் எல்லோரும், அவர் ஆதிக்கும். பகவனுக்கும்பிறந்தவர்; மைலாப்பூரில் வாழ்ந்தவர். இவர் வேளாளர் ஒருவரிடம் வளர்ந்தவர். ஏலேலசிங்கன் எனும் வர்த்தகனிடம் நூல் வாங்கி, நெசவுத் தொழில் செய்து இல்லறம் நடத்தியவர்.

வாசுகி எனும் பெண்ணை மணந்து வாழ்ந்தவர். ஏலேல சிங்கர் மற்றும் அழகாநந்தர் முதலியோர் வேண்டுகோளால், திருக்குறளை அருளிச் செய்து, சங்கப்பலகை மீது ஏறி நின்று, சங்கத்தவரை வென்று. திருக்குறளை அரங்