பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 62 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தார்கள் எல்லோரும், அவரை மதவாதி போலவே காட்டி விட்டினர்.

நீண்ட ஜடாமுடி தலையில் நிமிர்ந்து நிற்க; நெற்றியிலே பட்டை ஒளிர, முகத்திலே நீண்டி தாடியும், செறிந்த மீசையும் மிளிர, மார்புப் பகுதியின் குறுக்கிலே பூணுரலையும் மாட்டி, வள்ளுவரை ஒரு வித்தியாசமான அமைப்பிலே காட்டி விட்டினர்.

அவரின் உண்மையான தொழில் எப்படி இருந்தது என்பதை அறியாததாலோ, அல்லது அவரை அப்படிக் காட்டித் தங்கள் பக்கம் மதத் துறைக்கு இழுத்துக் கொள்ள முற்பட்ட அவசரத் தாலோ, தெரியவில்லை. அவருக்குக் கொடுக்கப் பட்டி வடிவமும் உருவமும், முற்றும் பொருந்தாத ஒன்றாகவேப் போய்விட்டது.

வள்ளுவர் வீரரே !

வள்ளுவர் மிகுந்த வீரம் உடிையவர். ஆற்றல் நிறைந்தவர். அவர் சிந்தையும் செயலும் எப்பொழுதும் போர் நினைவுகளிலும், வீரச்செயல் களிலுமே நிலைபெற்று இருந்தன என்பதற்கு, அவர் பாடிய பாடில்களைக் கொண்டிே நிச்சய மாகக் கூறலாம்.

வள்ளுவர் தாம் எழுதிய குறளை மூன்று பகுதி களாகப் பிரித்து, அறத்துப்பால், பொருட்பால்,