பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 16&

காமத்துப்பால் என்று பெயர் கொடுத்து, சுவை யான செய்திகளை எல்லாம் சுருக்கமாகச் சொன்னாலும் கூடி, அவர் அதற்காக மேற் கொண்டி உவமைகள், சான்றுகள் எல்லாம், போர், சண்டை, அதற்குப் பயன்படும் சொற்கள். கையாளும் ஆயுதங்கள் என்பதாகவே அதாவது மிகுதியாகவே அமைந்திருப்பதை நாம் சான்றாக ஏற்றுக் கொள்ளலாம்,

அதற்கும் முன்னதாக, வள்ளுவர் வீரராகத் திகழ்ந்தார். அந்த வீரத்தின் முற்றிய நிலையே விவேகமும், மிகுந்த ஞானமும் வளர உதவியது என்பதற்கும், நாம் பல தத்துவ ஞானிகளையும், வீரர்களையும் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

வீரர்களே ஞானிகள்

- கிரேக்கர்களின் கீர்த்தி மிக்கக் காலத்தில்தான், விளையாட்டுப் பந்தயங்களான ஒலிம்பிக் பந்தயங் கள், உயர்ந்த புகழுடன் நடத்தப்பட்டன.

அந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற வீரர்கள் எல்லோருமே, உடல் பலம் மிக்கவர்களாக விளங்கினர். அவர்கள் கலந்து கொண்ட போட்டி கள் எல்லாமே, கடுமை மிகுந்த வலிமையையே அடிப்படையாகக் கொண்டு விளங்கின.

அதனால், போட்டியிட்ட வீரர்கள், உடல் பலத்துடனே திகழ்ந்தனர். அவர்களும் மகிழ்ந் | பார்வையாளர்களும் பரவசமடைந்தனர்.