பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 165

மன ஆற்றல் மிக்கவர்களாகவும், மாமேதை களாகவும் விளங்கியிருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத் தான். -

வள்ளுவரும் வலிமையும்

வள்ளுவர் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும், சீர் மிகுந்த கவிஞராகவும் விளங்கக் காரணம், அவர் உடலை வலிமையாக வைத்திருந்ததால் தான். அவரது உடல் வலிமை, அவர் செய்து வந்த போர்த் தொழிலுக்குப் பெரிதும் உதவியது.

அரசருக்கு உதவிய அரும்பண்பால் எழுந்த அனுபவங்கள்: போர்க்களம் தந்த புதிய எழுச்சிகள்; பிறவியிலே பேரூற்றாகச் சுரந்த ஞானம். இவ்வளவும் சேர்ந்துதான், வள்ளுவரை, இவ்வாறு ஞானியாகப் பாடவைத்தது.

ஆமாம். வள்ளுவர் ஒன்றே செய்தார். அதையும் நன்றே செய்தார்.

குறள்களுக்குக் கரு

o- வள்ளுவருக்குப் போரின் மீது என்றும் விடாத வேட்கை இருந்தது; அவர் உள்ளமும் உணர்வும் போர்க்களத்தின் மீதே பரந்து கிடந்தன; அவரின் சிந்தனை எல்லாம், தாய் நாட்டின் மீதும், தன்மானமுள்ள குடிமக்கள் மீதும் இருந்ததே, அவரின் அருமையான கவிகளுக்கு, அடிப்படிை