பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 67

வள்ளுவர் ஒரு வீரர், உண்மையான மாவீரர் என்பதற்கு, அவர் சொல்லிச் சென்ற உவமைகளே நமக்கு சான்றாக விளங்குகின்றன.

வள்ளுவர் காதலைச் சொன்னாலும் சரி,

கல்வியறிவைச் சொன்னாலும் சரி, அரசர் பண்பைச் சொன்னாலும் சரி, அன்னையின் அன்பைச் சொன்னாலும் சரி, அவர் கூறிய

உவமைகளில் எல்லாம், படை, குடி, பகை, தூது, வாள், கதவுகள் என்று, போர்பற்றிய விளக்கமாகப் பெருகி வருகிற சொற்களாகவே சொல்லிச் சென்றதை நாம் காணலாம்.

உவமை உமிழ்கின்ற உண்மை

கல்வியின் மேன்மையை, கற்றவரின் பெருமையை வலியுறுத்த வந்த வள்ளுவர்,

காட்டுகிற உவமையைப் பாருங்கள்.

வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு (726)

நுண்ணறிவு மிக்கவர்கள் நிறைந்த சபையைக் கண்டு அஞ்சுகின்ற ஒருவருக்கு. நூலொடு என்ன தொடர்பு உண்டு என்று சொல்ல வந்த வள்ளுவர், வேறு எந்த உவமையையும் தராமல், வாளைப் பற்றிக் கூறுகிறார்.

வலிமையில்லாதவர்களுக்கு வாள் இருந்து என்ன பயன்? நூலுக்கு வாளையும், அவைக்குப்