பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 169

பொல்லாத பகைபற்றி எண்ணும்போது தமிழ் உணர்ச்சிகள் புயலாவது இயல்புதான் ஆனால்......

மெல்லிய உணர்வும், மேன்மைச் சுவையும் நிறைந்த காதலைப்பற்றி நினைக்கும்பொழுதிலும், போர், வீரம் பற்றி நினைவு வந்தால், அது என்ன சிந்தனை ? -

காதலை விளக்குகிற காமத்துப்பாலில், தவித்துப் போயிருக்கும் தலைவி, தளர்ந்து போயிருக்கும் தலைவி, தணல் போன்ற நினைவு களால் தயங்கித் தீரா வேதனையில் திளைத்துக் கிடக்கும் தலைவி, மற்றும் தலைவன் இவர்களின் எண்ணங்களை விளக்கும்போது கூட. போர்க்களம், துாது, படை, பகை, பூசல், கதவு, கள்வன், வெற்றி என்றெல்லாம் பேசுகிறாரே வள்ளுவர் ! இந்தச் சிந்தனை எந்த எண்ணங்களின் எதிரொலியாக இருந்திருக்க வேண்டும்

போர்க்களமும் பூகம்ப மனமும்

போர்க்களத்தில் பகைவரும் பயப்பட்டுப் பின்வாங்குவதற்குக் காரணமான என் வலிமை, இந்தப் பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்டு அழிந்து விட்டதே என்று ஒரு தலைவன் புலம்புகிறான். மயங்குகிறான்.

மனம் புலம்பும் போதும், வீரம் விளையாடும் போர்க்களம் தான் அவருக்கு 2–6).J G) LD (LITT 35 ஒடிவந்து நிற்கிறது.

வள்ளுவர்-11