பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 171

கொல்லுகின்ற படையாகவும் ஆகிவிட்டது என்று பாடுகிறாள் தலைவி.

அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன் குழல் போலும் கொல்லும் படை. (1228)

பகையும் மிகையும்

உள்ளம் கலங்கச் செய்யும் நிகழ்ச்சியைக் கூடி, உள்ளம் உடைக்கும் படை என்றல்லவா கூறுகிறார்.

தலைவனைப் பிரிந்து. துன்ப நிலையில் தவிக்கிறாள் தலைவி. அவள் வாய், சதா அரற்றிக் கொண்டிருக்கிறது.

காலையில் கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் காதல் அடங்கிக்கிடக்கிறது. மாலையானதும் அது மலைபோல் உருவெடுத்து, வாட்டுகிறது என்பது அவள் புலம்பல்.

அதனைக் கூற வந்த வள்ளுவர், அந்த மாலைப் பொழுதுக்கு நான் எவ்வாறு பகையானேன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற அழகே அழகு.

காலைக்கு செய்த நன்று என்கொல், எவன்கொள்யான் மாலைக்குச் செய்த பகை. (1222)

கொலைக்களம்

வெறும் பகை என்று மனத் துன்பத்தை விளக்கி விடுவதில், வள்ளுவருக்கு, திருப்தி ஏற்பட வில்லை போலும்.