பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

துன்பம் தருகின்ற அந்த மாலை நேரத்தை உயிரைக் கொண்டுபோக, கொலைக் களத்திற்கு வருகிற கொலைஞர் போல என்று காட்டுகிறார்.

கொடுமை நிறைந்த இடமான கொலைக்களம். கொடுமை நிறைந்தவர் கொலைஞர். கொல்லும் தொழிலைக் கொண்டவர்.

இந்தக் காட்சிகளைக் கண்டு கண்டு பழகிய, வள்ளுவருக்கு, இந்த உவமையே, இதய திருப்தி யாக வந்து நின்றிருக்கிறது.

காதலர் இல்வழி மாலை, கொலைகளத்து ஏதிலார் போல வரும். (1221)

இந்தக் குறளுக்கு இப்படியும் விளக்கம் தருகின்றனர்.

படைத்தலைவரில்லாத செருக்களத்தில். கொல்லும் தொழில் கொண்ட பகைவர்போல, செவ்வானத்துடன் மாலைப்பொழுது வருகிறது.

வானம் என்பது போர்க்களம். மாலை என்பது கொலைப்பகைவர்.

வள்ளுவரின் வீர நெஞ்சுக்கும், தீர

நினைவுக்கும் இது எடுப்பான எடுத்துக்காட்டாக இருக்கிறதல்லவா !