பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 175

செல்வம் என்பதற்கு இளமை, வளமை, அழகு, ஆக்கம், செழிப்பு என்றெல்லாம் பொருள் இருக் கிறது என்பார்கள்.

ஒருவருக்குப் புண்ணியம் இருக்கும் அளவுக்குத் தான் பொருள் தங்கியிருக்கும் என்பார்கள். அது போலவே ஒருவருக்குக் கண்ணியம் இருக்கும் அளவுக்குத்தான் அவரது உடலில் இளமை, அழகு, வளமை, நல்ல வாழ்க்கையெல்லாம் தங்கியிருக்கும் என்று நான் கூறியபொழுது, ஆமாம் ! அப்படித் தான் அது அமையும் என்றார் வள்ளுவர்.

ஒருவருக்கு உடல் வலிமையும் இளமையும் இருக்கிறபோது தான் மகிழ்ச்சியும் இன்பமும் பெருக்கெடுத்தோடும் ; அந்த வாழ்க்கையைத்தான் ஒளிமயமான வாழ்க்கை என்று பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

வலிமையையும் இளமையையும் இழந்துபோன ஒருவரால் சிரிக்கக் கூட முடியாது. அவரது வாழ்க்கை, இருள் மயமானதாகும். அதாவது, பகல் கூட அவருக்கு இருளாகவே இருக்கும். இந்தக் குறள், நான் கூறிய இந்தக் கருத்தைத்தான் சித்தரித்துக் காட்டுகிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள். (999)

உள்ளம் மகிழ்ந்து இன்பம் அடைய இயலாத வர்க்கு, இந்தப்பரந்த உலகம், இருள்இல்லாத பகல் பொழுதிலும், இருளில்தான் கிடக்கும்.