பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 177 -

ஆமாம். புலியின் தோலை மேலே போர்த்திக் கொண்டு, வயலில் போய் மேய்கிற பசு, வசமாக சிக்கிக் கொண்டால், அதன் கதி என்ன ஆகும் ?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்க் தற்று. (273)

வீரர்கள் புலியாக ஏன் வேடம் போடி வேண்டும்? புலியாகவே வலிமையில் ஆகிவிடலாமே!” பொய் வேடம் என்றும் நிலைக்காது. வெற்றி யையும் கொடுக்காது.

உடல் வலிமையே ஒப்பற்ற வலிமை என்று ஏற்றியும் போற்றியும் வாழ்வது வீரர்கள் கடமை. இந்தக் கருத்துக்களைத் தான் நான் என் குறட்பாக்களில் கூறினேன் என்றார். வள்ளுவர்.

அப்படிப்பட்ட அருமையான உடில் வலிமையை எவ்வாறு, காக்க வேண்டும் என்று கேட்டேன்.

இருக்கிறது என்றார். அவரது கருத்துக்களைக் கேட்கத் தயாராகிக் கொண்டேன். விளையாட்டுச் சிந்தனைகள் எனக்கு விருந்தாக அல்லவா சுவை யூட்டிக் கொண்டிருக்கின்றன. கவிஞரின் முன்னே சுவைஞனாக அமர்ந்து கொண்டு, ரசிக்கவும் ருசிக்கவும் தயாரானேன்.