பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 5 டாக்டர், எஸ். நவராஜ் செல்லையா

“மன்னிக்கவும்’ என்று தொடங்கியபடி, வர வேண்டும், வரவேண்டும் என்று வரவேற்கிறேன்.

எதிரே இருந்த ஒர் இருக்கையில் அமர்ந்தபடி,

என்னைப் பார்க்கிறார்.

‘உங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஒரு வேட்கையில் வந்தேன். நீங்கள் இப்படி நிலைக் கல்லாக இருக்கின்றீர்கள், என்கிறார்.

அறிமுகம் இல்லாததால் அயர்ந்து போனேன் இப்பொழுதாவது உங்களை நான் யாரென்று அறிந்து கொள்ள முயலலாமா! என்றேன்.

தடையில்லையே! விடை தர வேண்டிய விவேகம் எனக்கு இருக்கிறது. என்னைப்பற்றி நானே கூறுகிறேன். என்னை வள்ளுவர் என்று அழைப்பார்கள்.

அவர் சொல் அமுதமாக என் செவிகளில் பாய்ந்தோடியது. எந்த’ என்று எனது கேள்வி தயக்கமாக எழுந்தது; குறள் எழுதிய கவிஞன்

என்று கூறிக்கொண்டார்.

கைகுவித்தபடி அவரது கண்களைக் கூர்ந்து நோக்குகிறேன். காந்தக் கண்கள், கவர்ச்சிக் கண்கள், கற்றுத்துறைபோகிய கமலக்கண்கள். பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று யாரையும் தூண்டுகிற பழுத்த முகம்.