பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நோயில்லாத உடல்

உடல் வலிமையை எவ்வாறு காக்க வேண்டும் என்று கேட்டீர்கள். வலிமையைக் காப்பது எளிது

தானே என்றார் வள்ளுவர்.

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று பாடியிருக்கிறாள் ஒளவைப் பாட்டி என்று

நான் ஆரம்பித்தேன்.

உலகத்தில் மிகவும் கொடியது வறுமை தான். வறுமை என்றால் என்ன ? வற்றிய நிலை. வறண்டி

நிலை. குறைந்துபோன கொடிய நிலை.

வறுமை என்றால் செல்வம் இல்லாத நிலை என்று தானே எல்லோரும் எண்ணுகிறார்கள். பணமும் பொருளும்தான் அவர்களுக்கு முதல் நினைவாகத் தோன்றுகிறது.