பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நோய் வருகிறது என்றால் எப்படி வருகிறது. தெரியுமா ? உடல் நடுங்க, மனம் நடுங்க, உற்றாரும் உறவினரும் நடுங்க அல்லவா வருகிறது !! நோய் அச்சம் தருவதுடன் நில்லாமல், ஆட்டிப்படைத்து. அலைக்கழித்து, அழகுடலை மாய்த்து. ஆருயிரை யும் அழித்து விடுவதால் தான், அதனை அதிர் வருவதோர் நோய் என்று பாடினேன்.

முன்னெச்சரிக்கையாக இருந்தால், நிச்சயம் நோயைத் தடுத்து நிறுத்தலாம், நோய் வராமலே காக்கலாம் என்றேன் நான். ஆனால் அந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்பதைக் கூறினால் தானே என்று நான் பேசும்போது, அவசரப்படுகின்றீர்களே என்றார்.

அவசரமே அனைத்து நோய்களுக்கும் துன்பத் திற்கும் காரணமாகிவிடுகின்றது.

மனிதர்க்கும் மிகவும் வேண்டுவது நிதானம் தான். அந்த நிதானம் தவறி, மிகுதியாகும் போது அவசரமும் பதட்டமும் ஏற்பட்டுவிடுகிறது. நிதானம் குறையும்போது, மந்தமாகி விடுகிறது. சோம்பல் ஏற்பட்டுவிடுகிறது.

உடவில் உண்டாகிற .ெ ச ய ல் க ள் எப் பொழுதும் மிகுதியாகிறபோது, அல்லது குறைகிற போது நோய் ஏற்பட்டுவிடுகிறது என்பதைக் கூறி யிருக்கிறேன். அ த ற் கு ரி ய விளக்கத்தையும் இப்பொழுது தருகிறேன்.