பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பின்னர் காற்றை வெளியே விடுவதற்கு இரேசகம் என்றனர்.

இந்த நமது முறையை அறியாத நம் மக்கள், ! அன்னியர்கள், ஆங்கிலேயர்கள் கூறுகின்ற சுவாச முறையைக் கேட்டு ஆகா ஒகோ’ என்கிறார்கள்.

உள்ளே காற்றிழுக்கும் போது, 16 மாத்திரை நேரம் (மாத்திரை-நொடி) இழுத்து; 16 மாத்திரை நேரம் உள்ளே அடிக்கி வைத்து, பிறகு எட்டு மாத்திரை நேரம். மெதுவாகக் காற்றை w வெளிவிடி வேண்டும்.

இந்த அளவு முறையை அறிந்த, பயிற்சி செய்யாதவன் வாழ்க்கை, இருந்தும் இல்லாதது போல், கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து விடும்

என்றேன்.

அதெப்படி அவ்வளவு தெளிவாக உங்களால் சொல்ல முடிகிறது என்று என்னைக் கேட்கும் போது, அவரது உள்மனக் குறும்பை, பளிச்சிடும் விழிகளில் என்னால் பார்க்க முடிந்தது.

காற்றை மட்டுமா நமது முன்னோர் உணர்ந்து கொண்டனர்? அதைப் பத்தாகப் பிளந்தும், அளந்தும் பார்த்திருக்கின்றார்களே!

1. உயிர்க்காற்று 2. மலக்காற்று 3. தொழிற்காற்று 4. ஒலிக்காற்று