பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 17

உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்’ என்னுடன் நீங்கள் இருப்பதை என் பெரும் பேறாகக் கருதுகிறேன். என்னையும் ஒருபொருட் டாகக் கருதி வந்தது, என் வாழ்வின் பெரும்பயன் என்று பேசுவதைப் பார்த்து, என்னை நோக்கிக் கையமர்த்துகிறார்.

‘நமக்குள் உள்ள தமிழ் உறவு, தமிழ் நெஞ்சம், என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. நமக் குள்ளே பேசி மகிழ்வோம் என்கிறார் அவர். -

‘உங்களைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். சில வினாக் களை’ என்று தொடங்கினேன்.

தேவையில்லை. யார் என்ன முயன்றாலும் யாருக்கும் என்னைப்பற்றிய ஐயங்கள் தீர்ந்து போகப்போவதில்லை. என்னுடைய பிறப்பிடம் தமிழகம்தான். என்னுடைய சாதி பற்றிய எந்த சிந்தனையும் வேண்டாம். நான் சொன்ன சேதி, சொல்லிவைத்த நீதி இவற்றை நீங்கள் தெரிந்து கொண்டால் போதும். மதம் (வெறி) பிடித்து ஆட்டுகின்ற எந்த மதத்திற்கும் நான் அகப்பட வில்லை. எனது மதம் (கொள்கை), என் தமிழினத்தின் தலையாய பெருமைகள் தாம் என்றார்.

ரத்தினச்சுருக்கமான பேச்சு. பித்தனையும் பேரறிஞராக ஆக்குகிற முத்தான அறிமுகம்