பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

யாகத் தருகின்ற உடற்பயிற்சியையும் நீங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ளவே நானும் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்றார்.

உங்களுக்குத் தெரியாததையா என்னிடம் கேட்டீர்கள்? அதையும் தெரிந்து கொண்டு தான், நான் விளக்கம் தந்தேன் என்றேன்.

உண்மைதான். நமது உடல் ஒப்பற்ற அமைப்பு கொண்ட உயர்ந்த படைப்பாகும். அதற்கு அளவான உணவும், அளவான பயிற்சிகளும் கட்டிாயம் வேண்டும்.

நாம் உறங்கும் போது கூட, நமது உடல் சக்தியை இழந்து கொண்டுதான் இருக்கிறது. வேலை செய்யும் பொழுதோ, மிகுதியாக செலவாகும் என்று நான் சொல்லாமலே விளங்கும்.

செலவு என்ற சொல்லை நாங்கள் அழிவு என்றும் கூறுவோம். உடலில் இழக்கிற சக்தியை, நாம் மீண்டும் சேகரித்துக் காத்துக் கொள்கின்ற செயலை நாம் மேற் கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளாத போது தான் உடல் நலிகிறது. நோய்க்கு ஆளாகிறது, அடிமையாகிறது, அவதிப் படுகிறது. என்று கூறிய வள்ளுவர், நமது மக்களுக்கு நான் கூறும் அறிவுரை இது தான் என்று என்னைப் பார்த்தார்.