பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 189

புதிய குறள் ஒன்று சொல்லப் போகிறீர்களாக என்றேன். இல்லை. பழைய குறள். புதியபொருள் என்றார்.

நெடுங் கடலும் தன்நீர்மை குன்றும்

தடிந்தெழிலி தான் நல்கா தாகி விடின்

மண்ணுலகில் பெரும்பகுதியைக் கொண்டு விளங்குகின்ற பெருங்கடல் கூட தண்ணிரின்று குறைப்பட்டு போகக்கூடும். எப்போது? மேகங்கள் மழையாக நீரைப் பெய்யாது போகிற போது.

அதுபோலவே, உடல் என்ற கடலுக்கு, பயிற்சி என்கிற மேகம், சக்தி என்ற மழையைப் பொழியாவிட்டால், உடலும் குறைவாகும். நோய்க்கு ஆளாகும். நொந்து நைந்து போகும்.

ஆகவே விளையாட்டு வீரர்கள் நோயில்லா உடல் காத்து வலிமையாகத் தினம் வளர்த்து, வெற்றிகளைப் பெறவேண்டும் என்றார்.

வலிமையிருந்தால் தானே திறம் வரும் என்றேன்?

உண்மைதானே!

வாருங்கள் பேசிக் கொண்டிே போகலாம் என்றார்.