பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தெழச் செய்து, புயல் போன்ற நிலையை, உடலுக்குள் புகுத்தி, பூகம்பமாக்கி விடுவதால், இரத்தம் சுண்டவும், இதயம் துடிக்கவும் போன்ற பாழ்நிலைகள் பிறந்து விடுகின்றன.

அதனால் தான், வெகுளியின் வேலை வலிமையை மாய்க்கும்.

மயக்கமோ போதையால் உண்டாவது. கள் குடித்தல் போன்ற காரியங்களால் விளைகிற

மயக்கம், மூளையைத் தாக்கி, நரம்புகளின் வலிமையை வளைத்து, தளர்ச்சியை யூட்டி விடுகின்றது.

ஆகவே, இந்த மூன்று காரியங்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாதவர்கள், நோய்க்கு ஆளாக மாட்டார்கள். வலிமையில்

வாழ்வாங்கு வாழ்வார்கள்.

இன்னும் இந்தக் குறிப்பை, விளக்குகிறேன் கேளுங்கள் ஒருவருக்கு வேண்டாதது விழைவு வெறுப்பு அறியாமை என்பவை நான் எனும் அகங்காரம்; எனக்கு இதுதான் வேண்டும் என்று சுயநல வேகமும் தாகமும் நிறைந்த ஆசை: ஆசையில் மற்றவரது பொருட்களை அபகரிக்க என்னும் வேட்கை; வெறி: கிடைக்காத பொழுது கொப்புளிக்கும் கோபம் இவைதான் உடலை அழித்து, வலிமையைக் குறைத்து, GYJ GYTIT வொட்டாமல் வீழ்த்துபவை என்றார் வள்ளுவர்.