பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வலிமை இன்மை போல, துன்பம் தரக்கூடியது உலகில்வேறு எதுவுமே இல்லை. அந்த வலிமை யின் மையே துன்பத்திலும் துன்பமானது.

பொருளில்லாத வறுமையாளர்க்கு பின்னாளில் நல்ல வாழ்வு அமைய வாய்ப்புண்டு. ஆனால் உடலில் வலிமையில்லாமல் வாழும் வருமை யாளருக்கே, வாழ்வே அழிந்து போகும் நல்ல வாழ்வு வரும் என்கிற நம்பிக்கைகூட இல்லாமல் போய்விடும்.

இந்த நிலை எல்லோருக்கும் பொருந்தும். செல்வ வசதி உள்ளவர்கள், வலிமையில்லாத வர்களாகஇருந்து விட்டால்; பொருள் வளம் இல்லாதவர்கள் வலிமையுள்ளவர்களாக இருந்து விட்டால் அவர்கள் நிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நான் அவரது முகத்தையே பார்த்துக் கொண் டிருந்தேன் அவரது சொற்கள் வேகம் பெற்று வெளியே வந்தன.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். (973)

வலிமையில்லாதவர்கள், உயர்ந்த பொறுப்பில் பதவியில் அல்லது உயர்ந்த நிலையில் வாழ்ந்தாலும், அவர் மேலானவர் அல்லர். வலிமை நிறைந்தவர்கள்,