பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 1 95.

கீழான நிலையில், பதவியில் இருந்தாலும், அவர்கள் கீழானவர் அல்லர்.

வலிமையுடையவர்களே செயற்கரிய காரியங். களையெல்லாம் செய்யமுடியும் வலிமையற்றவர். களோ, தமக்கு உரிய காரியத்தை கூடி செய்து. கொள்ளமுடியாமல், ஆள்தேடி அலைவார்கள்.

அதனால்தான், வலிமையால், அதன் வழிவரு. கிற திறமையால் மக்கள் மாறுபட்டுத் தெரி கின்றார்கள் வேறுபட்டு வாழ்கின்றார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (972)

பிறப்பிலே எல்லா மக்களும் ஒன்று போல்தான் தெரிகின்றார்கள். ஆனால், உடல்வலிமையில் அதனால் விளைகின்ற ஒப்பற்ற திறமையில்; அந்தத் திறமையில் எழுகின்ற செயல்முறைகளில் வேறுபாடு நிச்சயம் தெரியும். அப்பொழுது வலிமையும் திறமையும் உள்ளவர்கள் வாழ்த்தப்படு: வார்கள் வணக்கத்திற்கு உரியவராகவும் ஆகி. விடுகின்றார்கள்.

ஆமாம் ஒவ்வொரு மனிதரும் அவரவர் செய்யும் தொழிலில் வேற்றுமை தெரிகிறது. செய்கிற தொழிலில் வேகம் தெரிகிறது. விவேகம் புரிகிறது. இறுதியில் பெறுகிற வெற்றியின் திண்மையும் புரிகிறது.