பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

திறமையுடையவர்கள் சிறப்புகளுக்கு உரியவ ராகின்றார்கள் திறமையற்றவர்கள் மற்றவர் களால் இகழப்படுகின்றார்கள். இந்த உலக நியதியைத் தான், இந்த குறளில் எழுதியிருக் கிறேன் - *

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை \ எல்லாரும் செய்வர் சிறப்பு. (752)

பொருள் இல்லாதவரைத் தான் எல்லோரும் இகழ்ச்சியாகப் பேசுவர் ஏளனமாக எண்ணுவர் என்று தான் மக்கள் நினைக்கின்றார்கள்.

செல்வர் என்பதற்குப் பொருள் செழிப் புள்ளவர், ஆக்கம் நிறைந்தவர், அழகு மிக்கவர், மதிப்பெருக்கம் கொண்டவர், வாழ்க்கையில் வளரும் பண்பினர் என்றெல்லாம் இருக்கிறது.

- இந்தப் பண்புகளை யெல்லாம் மறந்து விட்டு, :பணம் தான் பெரிது, பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் பணம் பாதாளம் வரையிலும் பாயும் என்றெல்லாம் பேசுவது தான், எனக்கு விந்தையாகப்படுகிறது.

நோய் உள்ளவர்களை நொடிக்கொருதரம் ‘நொந்து புலம்புபவர்களை; குடும்பத்தில் உள்ளவர் களையும் கவலைக்குள் ஆழ்த்தி, கண்ணிர் விடச் செய்கிறவர்களை, யார்தான் மதிப்பார்?

வலிமையின்மை மரணத்திற்குச் சமம் அல்லவா!