பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 1 97.”

அதனால் தான், வலிமை இல்லாதவர்களை உலகம் ஏசும். இகழும் ஏளனமாகப் பேசி மகிழும். அதே நேரத்தில் வலிமையுள்ளவர்களை, வாழ்த்தும், வணங்கும். வரிசையில் வந்து நின்று. புகழ்பாடும் அவர் சொல்லும் ஏவலுக்கு செவி சாய்க்கும் தலைதாழ்த்தும் தன்மையிலும் தண், மையிலும் அணிசேறும்.

அப்படிபட்ட வலிமையும், அதனால் விளையும் திறமையில்லாதவர்கள் செயல்கள் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கமாகக் கூற வேண்டும் என்று, கேட்டுக் கொண்டேன்.

பலம் இல்லாதவன், திறமையற்றவனாகி விடுகிறான். அவனுக்கே அவன் மேல் உள்ள நம்பிக்கை, கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து போவதையும், மற்றவர்கள் தன்னை இகழ் வதையும் அறிந்து கொள்கிறபோது, அதிலிருந்து தப்பி வெளிவர, வேறுபல முறைகளைக் செய லாக்கத் தொடங்குகிறான் அவனது தாழ்வு மனப். பான்மை, அவனை மேலாக நினைக்கத் துாண்டு கிறது. ஆனால் மந்த அறிவோ அவனை உளறச். செய்து கேவலப்படுத்தி விடுகிறது.

திறமையில்லாமல், தன்னைத் திறம் உடையவன்போல் பேசி மகிழ்வதும்; திறமைசாலி என்று தன்னைப் பிறருக்குக் காட்டிக் கொள்வதும், திறமையற்றவர்க்கு கைவந்த கலையாகும்.