பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நானும் ஆமாம் என்றேன். வேறு என்ன. சொல்ல.

‘ஏதோ எழுதிக்கொண்டிருந்தீர்கள். இ.ை யிலே வந்துவிட்டேன். இடையூறு நடந்து விட்டதோ என்று மீண்டும் அவர் பேசினார்.

உங்களைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டி ருந்தேன். எழுதிக்கொண்டிருந்தேன் என்றேன்.

இன்னுமா என்னைப்பற்றி எழுதுகிறீர்கள்? மற்றவர்கள் எதையாவது எழுதலாம். ஆனால் நீங்கள் விளையாட்டுத்துறைபற்றி எழுதுகிறவர். என்று கேள்விப்பட்டல்லவா சந்திக்க வந்தேன். நீங்களோ....

ஆமாம் அய்யா... உங்களைப்பற்றி நான் எழுதிய ஒரு முன்னுரையைப் படிக்கிறேன். உங்கள் வினாவுக்கு, அது விடையாக இருக்கும். ஆனால் அந்த அளவுக்குப் பொறுமை. உங்களுக்குப் பொறுமை இருக்குமோ என்றுதான்.

தம்பி. அப்படி அழைக்கலாமா...

தலையசைத்துக்கொண்டேன். இதை விட வேறு மகிழ்ச்சியுண்ட்ா...!

நீங்கள் படிக்கலாம் என்றார். நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன். எழுதி வைத்திருந்த என்து முன்னுரையைப் படிக்கத் தொடங்கினேன்.