பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

தான் கல்விப் பெருக்கம் கொண்டிவன், தொழில் நுணுக்கம் நிறைந்தவன், தேர்ந்தவன், எதிலும் வல்லவன் என்று செருக்குடன் பேசி, அவன் மற்றவர்கள் மத்தியிலே, நடிக்கிறான். அந்த நடிப்பு அவனை இழிவுக்குள்ளாக்கி, துன்பங்கள் பலவற்றிலும் ஆழ்த்தி விடுகிறது.

எதையும் காண செய்ய அவனுக்கு வழி பில்லாமற்போவதால், அவன் அவனாக எதையும் காணவும் மாட்டான். பிறருக்குப் புரியாது என்று காணாத பலவற்றைக் காட்டுவான். தானே. கண்டது போலவும் தலைகனத்துடன் பேசுவான்.

மற்றவர்கள் உண்டு என்பதை இவன் இல்லை யென்பான் அவனை நான் ஒரு பேய்க்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறேன். -

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

மனித உருவில் காணப்படும் பிணம்மட்டுமல்ல. அத்தகைய பண்பிலிகள், பூவுலகத்தில் வாழ்கிற பேயென்றே கருதப்படும்.

இந்த வலிமையற்ற பேய்களுக்கு, அறிவுதான் குறைவு என்றால், உடல் வலிமை குறைந்துபோகக் காரணம் என்ன என்றேன்.

காமம் என்றேன் அல்லவா! அந்தக் காரியத்தில்) கரைகாணா இன்பம் தேடுவதால் தான்; உடலில்