பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அவமானப்பட, எந்த பல ஹீனனும் தயங்க மாட்டான் என்றேன் நான்.

உண்மை தான். அப்படிப்பட்ட ஆளைப்பற்றி, ஒரு உவமை மூலம் சொல்லியிருக்கிறேன் கேளுங்கள்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். - (840)

வீரர்கள் நிறைந்திருக்கும் இடத்திற்குள், வீரமும் திறமையும் வலிமையும் அற்ற ஒரு பேதை புகுவது எப்படி என்றால், தூய்மையில்லாத பொருளின்மேல் (நரகல்) காலை வைத்து, மிதித்து, விட்டு, அந்தக் காலைக் கழுவாமுல், பஞ்சனைமீது வைத்ததற்கு ஒக்கும்.

எப்படி இந்த உவமை!

நல்ல திறனற்றவர்கள், நரகலுக்குச் சமம் என்றதற்கு மேலாக கூற ஒன்றுமே இல்லை ஐயா! உங்கள் வலுவான உவமை, வாழும் மனித. இனத்திற்கு, மாண்பான வழிகாட்டியாக அமைந்: திருக்கிறது என்று நான் பாராட்டினேன்.

இரண்டாயிரம் ஆண்டுகள் என் பாடல் இருந்தும், யாரும் பின்பற்றியதாகத் தெரிய வில்லையே. -

இங்கே விளையாடுவோர், ஆடி ஆரம்பித்து,

சிறிது நேரத்திற்குள்ளேயே, மேல்மூச்சு கீழ்மூச்சு. வாங்குகிறார்களே! பார்க்க பாவமாக இருக்கிறது.