பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 201

உடல் வலிமையை வளர்ப்பது முதல் பாடம். அதன் வழி திறமையைக் கற்றுக் கொள்வதோ இரண்டாவது பாடிமாக இருக்க வேண்டும், என்று வள்ளுவர் சொல்லியதை இடைமறித்தேன்.

திறமைகளைக் கற்றுக் கொள்ளும் முறை களைக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டதற்கு, என்னைப் பேச வைத்து விடுவது என்று தீர்மானித்து விட்டீர்கள் போலும் என்று சிரித்துக் கொண்டார்.

ஞானதீபமாக அந்த சிரிப்பு எனக்குத் தெரிந்தது.

விளையாட்டை கற்கும் விதம்!

உடலில் வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் வலிமையான நிலைதான் வளமான நிலையாகும்.

வளமான மண்ணிலே, பதமான சூழ்நிலை இருக்கும். பயிர்கள் விளையும் இதமான நிலையும் ஏற்படும்.

அதுபோலவே, ΟΙ ΘΥΤΙΟΠΤ6δΤ உடலில்தான் ஆர்வம் எழும். ஆற்றல் மிகும் திறமைகள் ஊறும். தேர்ச்சிகள் பெருகும். திண்மையான விளைவுகள் தேங்கும் என்று வள்ளுவர் பேசிக் கொண்டிே வந்தார்.

வள்ளுவர்-13