பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விளையாட்டில் தேர்ச்சி பெற !

வீடியோ படம் ஒடிக்கொண்டிருந்தது.

விளையாட்டுக்கள் பற்றிய படம். மேல் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கும், நம் நாட்டு ஆட்டக் காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போட்டி ஒன்றினைக் காட்டும் படம்.

வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் வள்ளுவர்.

நிழற்படம், புகைப்படம், பேசும்படம், திரைப் படம், வீடியோ படம் என்று, இந்த நாளில் விஞ்ஞானம் கொண்டு வந்திருக்கிற விந்தைகள் பற்றி நான் விளக்கம் கூறக் கூற, அவர் வியப்பு மேலிட்டு, புன்னகை புரிந்தார்.

ஆகா! மனித மூளையின் ஆற்றலுக்கு ஈடு இணை இல்லை பார்த்தீர்களா! எங்கள் காலத்தில்,