பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தணைகள் 211

ஆளுக்கு ஆள், நேருக்கு நேர் என்ற நிலைமை தான் , இருந்தது.

இன்று எங்கோ இருக்கிறவர்களை, நாம் இங்கிருந்துகொண்டு பார்க்கிறோம். மகிழ்கிறோம்.

மெய்ப் பொருள் காண்பது தான் அறிவு என்று நான் பாடினேன். இப்போது மெய்ப்பொருளில் உட்பொருள் கண்டிருக்கின்றார்களே இந்த மாந்தர்கள்!

நுட்பத்திலும் திட்பம். அந்தத் திட்பத்திலும் தேர்ச்சி. தேர்ச்சியிலும் எழுச்சி. இந்த அறிவு கொண்டு வந்திருக்கும் ஆராய்ச்சியும்; அது பிறப்பித்துத் தந்திருக்கும் பெருமை மிகு பொருட் களும், மனித குலத்தின் மாண்பையல்லவா, ‘வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றன என்று பேசிய வள்ளுவரை, பேராச்சரியத்துடன் பார்த்தேன்.

நடந்து போன நிகழ்ச்சிகளை, இறந்த காலம் என்று நாங்கள் கோடிட்டுக் காட்டினோம். ஏன் அப்படிக் கூறினோம் தெரியுமா! இறப்பு என்பது இறுதியாக நடக்கும் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு, எதுவுமே நடக்காது என்பதை உறுதியாகக் குறிக்கவே, இறந்த காலம் என்றோம்.

ஆனால், அப்படி ஒரு காலம். எந்த நிகழ்ச்சிக்கும் இங்கே இருக்காது போலும். கண்