பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 213

வெளிநாட்டு அணியினர், நம் நாட்டு வீரர்கள் காக்கும் இலக்கிற்குள் பந்தை அடித்து, வெற்றி பெற்றதற்குத் தான், அந்த விண்ணதிரும் சத்தம்.

அவர்களின் ஆற்றல் உங்களுக்குப் புரிகிற தல்லவா! அவர்களுக்கு, வெற்றி விரைந்து வந்து முன்னே விளையாடுகிறது பார்த்தீர்களா! ஏனென்றால், அவர்கள் காட்டுகிற முனைப்பும் முயற்சியும் தெரிகிறது அப்படி என்றார். எப்படி என்றேன் நான்!

தான் நன்கு தெரிந்து கொண்ட, தன்னின தக்கார்களுடன், செய்ய விழைகிற காரியத்தை, நன்கு ஆராய்ந்து முடிவு செய்து அத்துடன் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல மக்களுக்கு, காரியம் எதையுமே சாதித்து வெற்றி பெற முடியும். அவர்களுக்கு அரிய பொருள் என்று எதுவுமே இல்லை.

நான் அன்றே பாடியிருக்கின்றேனே என்று, அந்தக் குறளைப் பாடிக் காட்டினார்.

தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிசெய்வாருக்கு அரும்பொருள் யாதொன்றும் இல், (462)

எண்ண வேண்டும். அந்த எண்ணத்தில் தெளிவு வேண்டும். அந்தத் தெளிவுக்கு இலக்கு வேண்டும். இலக்கின் தன்மை, நுண்மை, வன்மை, கடுமை என்பதையும் புரிந்தி- வேண்டும். அதனை