பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 2

களை மேலோங்கி நீற்கவைக்க முடியவில்லையே. என்றேன் சற்று ஆதங்கத்தோடு,

நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நீங்கள் விளையாட்டுக்களை இந்த நாட்டில் வளர்த்து விடி. பல வசதிகளை செய்து தருகிறீர்கள். வாய்ப்புக். களை உண்டாக்கித் தருகின்றீர்கள். இருந்தாலும், வெற்றிக் கனி, எட்டாக் கனியாகவே இருக்கிறது:

என்பது தானே உங்கள் மனக்குறை?

ஆமாம் என்று தலையாட்டினேன்.

‘ஏறுகிற வரையில் தான் ஏற்றிவிடி முடியும்’ என்கிற பழமொழி ஒன்று இருக்கிறது தெரியுமா?

தெரியும் என்றேன்.

அந்த நிலைமை தான் இந்த நாட்டில் இருக் கிறது. மரம் ஏற விரும்புகிறவனுக்கு, அருகில் உள்ள ஆர்வக்காரர்கள், கை எட்டுகிற உயரத் திற்குத்தான், தூக்கிவிடமுடியும். கூடவே மரத்தின் உச்சிக்குக் கொண்டு போகமுடியுமா?

அதுபோலவே, ஒருவன் செய்கிற காரியத்திற்கு, உதவி செய்பவர்கள், எல்லா வசதிகளை மட்டுமே செய்து தரமுடியும். கூடவே இருந்து அவன் செய்கிற காரியத்தையும் செய்ய முடியுமா? அப்படி யாராவது செய்தாலும், அல்லது செய்ய வேண்டு. மென்று விரும்பினாலும். அந்தக் காரியம் நிறை.