பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 216 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

வேறவும் நிறைவேறாது. உருப்படவும் உருப்படாது.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் கின்று போற்றினும் பொத்தப் படும். (468)

தக்க வழிகளால் ஒரு காரியத்தை செய்ய முயலாத முயற்சி அற்ற ஒருவனுக்கு, பலர் கூடி வந்து உதவி செய்தாலும் அந்தக் காரியம் பலன் தராது அழிந்து போகும். ஆமாம், பொத்தப்படும் என்றேன் பாருங்கள்! அதாவது புரையோடிப் போகும் என்றேன்.

புண் ஒன்று புரையோடிப் போனால், பழுது பட்ட அந்த அங்கத்தை, அகற்றி எறிய வேண்டியது தானே?

ஒழுங்காக முயற்சி செய்யாத உங்கள் ஆட்டக் காரர்களை ஆட்டத்தை விட்டே அகற்றிவிட வேண்டும். விளையாட்டில் அக்கறையும், ஆர்வமும், முயற்சியும், உழைப்பும் காட்டாத வீரர்கள், புரையோடியபுண்ணைப் போன்றவர்கள்.

அந்த அகற்றும் காரியத்தைச் செய்கின்ற தலைவர்கள் நம் நாட்டில் குறைவு என்றேன்.

உங்கள் இழப்புக்கும், இளிவுக்கும் இதுதான் காரணம் என்றார் வள்ளுவர்.