பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 217

ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தக்க வழிகளைப் பின் பற்ற வேண்டும் என்று இடித்து, அறிவுரை கூற வேண்டும். இந்த வேலையை, இவன் சிறப்பாக செய்து முடிப்பான் என்றே தேர்ந்து உதவ வேண்டும். உதவிக் கொண்டு இருக்கின்ற பொழுதே, அவனது முன்னேற்றத்தையும் அறிந்து, பின் தொடர்ந்து பேண வேண்டும்

அப்படி செய்யாத தலைவர்கள் தாம், வெற்றியின் அழிவுக்கு வித்திட்டு, வேலியிட்டுக்

காக்கும், உள்பகைவர்கள் ஆவார்கள்.

உடம்பில் மறைந்து கிடந்து ஊறு செய்கின்ற பயங்கர நோய்களுக்கும், அப்படிப்பட்டத் தலைவர் களுக்கும் வேறுபாடே இல்லை.

அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும், கெடுக்கும் பகைவர்கள் இல்லாமலேயே கெட்டுப் போவார்கள். தீயன கண்டு, துள்ளி எழுந்தும் தடுத்து நிறுத்துவார்க்கும், பகைவர்கள் இருந் தாலும், இல்லாமல் அழிவார்கள்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே

கெடுக்கும் தகைமையவர் (447)

தோல்வியை நம்மவர்கள் ஏற்கிறார்கள் என்றால், நம்மிடிையே தேவையான திறமை

வள்ளுவர்-14