பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 219)

வீடு என்கிற உடல் உறுதியாக இருக்க, உழைப்பு,நோக்கம், நாட்டுப்பற்று என்ற தூண்கள் உறுதியாக இருக்க வேண்டும். - s 2. உழைக்காத வீரர்கள், உதிய மரம் போன்ற வர்கள். எப்பொழுதும் ஒடிந்து விழக் கூடியவர்கள். இந்த நிலைமைதான், இங்கே, இந்த படத்தில் என்னால் காணமுடிகிறது. இதைத்தான் நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். -

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்

சார்பு இலார்க்கும் இல்லை கிலை. (449)

முதல் என்றால் மூலதனம். ஆதாரம் ung மதலை என்றால் தூண். வீடு நிலை பெற உதவுவன தூண்கள் தாம்,

எங்களவர்களை மாற்ற மு டி யா தோ என்றேன்.

ஏன் முடியாது? அவர்கள் செய்கிற இடத்தைப் பொறுத்துத் தான், அவர்கள் வாழ்க்கை முறை இருக்கிறது. அந்த வாழ்வு முறையைப் புரிந்து கொண்டால், எளிதாக மாற்ற முடியும் என்றார் வள்ளுவர்.

அதற்குள் வீடியோ படம் நின்று போனது. மின்விசிறியும் ஓடாமல் நின்றது. நாங்கள் இருந்த இடமும் இருள் சூழ்ந்ததாகி விட்டது.