பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

சிந்தையிலும் தெளிவு இருக்கும். பொலிவும் இருக்கும்.

ஆனால், தவறான காரியம் செய்வது என்பது, திடீரென்று இருட்டில் இருப்பதுபோல. முதலில் திகைத்து, இருளை அனுசரித்து, பார்க்கப் பழகிக் கொள்வதுபோல, தவறான காரியத்தை செய்யத் தொடங்குகிறபோது தடுமாறி, பின்பு அதையே சரியென்று ஏற்றுக் கொள்வதைத் தான், நான் குறிப்பிட்டேன் என்றார். - t

எதற்கு இந்தப் பீடிகை என்று எனக்குப் புரியாமல் இருந்ததை, புரிந்து கொண்ட அவர், தொடர்ந்து பேசினார். * . “

விளையாட்டுக்கு உழைப்பும், முயற்சியும், எதிர்நோக்கும் இலட்சியமும் வேண்டும் என்று நீங்கள் கூறினர்களே, நினைவிருக்கிறதா? அந்த உழைப்புக்கு அஞ்சுபவர்கள், அவர்களுக்குள்ளேயே தவறு செய்கிறார்கள் என்பதைத் தான், குறித்துக் காட்டினேன்.

< \,. .

உழைப்பு நன்று. உழைப்பை வெறுப்பது தவறு. உழைக்க மறுப்பது கொடுமை. உழைப்பது

போல் நடிப்பது உலகப் பெருங் கொடுமை.”

இப்படித்தான், நம் வீரர்கள் நடிக்கிறார்கள் ங்ோலும். அந்தப் பேதமையான செயல் தான்,