பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-26 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

இங்கே நான் செல்வர் என்றது, திறமைச் செல்வம் மிகுதியாக உடிையவரை.

இல்லாரை எல்லாம் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. (752)

ஆகவே, திறனற்றோரை, எல்லோரும் இகழ்வர் என்று தெரிந்தும், தேர்ச்சி கொள்ளாத ஒருவரை, நாம் எப்படி கூறவேண்டும் தெரியுமா? பேய் என்று தான்.

உலகத்தார் ஏற்றுப் போற்றி, உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிற உண்மை ஒன்றை, இல்லையென்று ஏற்றுக் கொண்டு, தொல்லையென்று தள்ளி, சோம்பேறியாக வாழ்பவர்கள், இந்த உலகத்தில் நடிமாடும் பேய்கள் என்று நான் கூறியதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

  • .

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850)

அலகை என்றால் பேய் நடமாடும் பேயாக நான் உவமித்துக் காட்டியிருக்கிறேன் என்று வள்ளுவர் சற்று வேகமாகவே பேசினார். .

திறமை இல்லாதவரை, திறமையை வளர்க்கும் நோக்கம் அற்றவரை, நோய் என்றும்,