பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் z 27

பேய் என்றும் கூறியிருக்கின்றீர்கள். உங்கள் உள்ளம் புரிகிறது. உழைப்பை ஆதரிக்கும் உன்னத நோக்கம் புரிகிறது என்றேன். - - -

ஆமாம்! உழைப்பதை துன்பம் என்றால், தன் வாழ்வை உயர்த்த முற்படும் செயல்களைத் துன்பம் என்றால், அவர்கள் என்னதான் செய்ய விரும்புகின்றார்கள் என்பதுதான் எனக்கும் புரிய வில்லை.

யார் உண்மையில் உயர்வார்கள்? உயர்ந்த நிலையைப் பெறுவார்கள்? ஊர் புகழும் மேன்மையை எய்துவார்கள் என்றெல்லாம் நான் பாடியிருப்பதைக் கூறினால் உங்களுக்குப் புரியும் என்றார்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பைப் படாத வர் (623)

இடும்பை என்றால் துன்பம் என்று பொருள். அந்தத் துன்பத்திற்கே துன்பம் விளைவிப்பவராய், துணிந்து மு ய ற் சி ப் ப வர் க ள் உயர்ந்து விடுகின்றார்கள். o

வெள்ளம் போல துன்பம் வந்தாலும், அவர்கள் உள்ளம் அதைப் பற்றி அலட்சியப் படுத்துகிறபோது, வந்த துன்பம் வடிந்து போய் விடுகிறது. விரைந்து அழிந்து விடுகிறது. அவர்