பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் -

- இடைக்காடர் என்ற புலவர், வள்ளுவர் குறளைப் போற்றும் விதமே வியப்பினில் ஆழ்த்து கிறது.

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.

அருந்தமிழ்ப் பாட்டி ஒளவையோ அவரையும் மிஞ்சிப் பாராட்டிவிட்டார். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். கண்ணால் காணமுடியாத ஒரு அணுவுக்குள்ளே ஏழு கடலை அடக்கிவிட்டதுபோல, மிக நுட்பமாக வாழ்க்கை வழிமுறைகளை வகுத்துத் தொகுத்துக் காட்டிவிட்டார் வள்ளுவர், என்று பாடிய பாட்டியின் வாக்கு உண்மை தான்.

திருக்குறளுக்கு மணக்குடவர், பரிமேல் அழகர், பருதி, காளிங்கர், பரிப்பெருமாள் போன்று பத்து பேராசிரியர்களுக்கு மேல் உரையெழுதி விட்டுப் போய்விட்டனர். தொடர்ந்து இப்பொழுதும் ஆயிர கணக்கான அறிஞர்கள் உரை எழுதிக்கொண்டு, அதனால் உயர்ந்தவர்களாக வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

‘ உள்ளுங்ர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு’ என்று செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார் என்னும் புலவர் பாடியிருப்பது உண்மையிலும் உண்மையன்றோ !