பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

ஆகவே உடல் வருத்தி செய்கின்ற பயிற்சி களை, துன்பம் என்று கொள்ளாமல், இன்பம் என்று எண்ணி செய்கின்றவர் எப்பொழுதும் துன்பமே அடைய மாட்டார்கள் இகழ்ச்சியையும் சந்திக்க மாட்டார்கள்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் (629

துன்பத்தை இன்பமாய் துணிந்து ஏற்கும் பண்புகளை வளர்ப்பது விளையாட்டுக்கள் தாம். அந்தத் துறையில் ஆர்வமுடன் வந்து, செய்தற். குரிய பயிற்சிகளை சிரமம் ஏற்று செய்ய வேண்டும்.

இந்த நினைவு ஏற்பட்டாக வேண்டும் என்று நீங்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் பல போட்டிகளைப் பார்த்துக் கொண்டு. வந்திருக்கின்றீர்கள். பலதரப்பட்ட வீரர்களின் இயக்கங்களையும் கண்டிருக்கின்றீர்கள். இந்த நிலைமை பற்றி, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதையும். தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். . . . .

நிச்ச்யமாக தனது திறமையின் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை செயல் மூலமாகவே, வெளிப்படுத்த வேண்டும். பேச்சின் மூலம் பெரிதாகக் காட்டிக் கொள்வதில்: விண்ணிப்மே இல்லை. -