பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 23

அடக்கம், மனதில் வேண்டும். ஆண்மை மிகு. முயற்சிகள் செயலில் வேண்டும். அப்படி இல்லாமல், தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதும், வியந்து பேசுவதும், கர்வம் கொள் வதும், வேண்டாத செயல்களாகும். அதனால், தான். குற்றம் களைகின்ற குணம் வேண்டும் என்று: பாடினேன்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, கயவற்க . . . . ;

கன்றி பயவா வினை. (439)

... எக்காலத்திலும், தன்னை மிக உயர்வாக எண்ணி, வியந்து தற்பெருமையுடன் மதித்துக் கொள்ளக் கூடாது. அது போலவே, நன்மைகள் நல்காத செயல்களையும் விரும்பக் கூடாது.

இவ்வாறு வாழ்கின்ற நோக்கம் உள்ளவரே, விளையாட்டுக்களில் திறமைபெற முடியும். வெற்றி பெற முடியும். என்றார்.

வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அறையில், மீண்டும் வெளிச்சம் வரவே, உள்ளே நுழைந்தோம்.

உட்கார்ந்து பேசலாமே என்றார். அவர்

திருவாய் வழங்குகிற தெள்ளமுதக் கருத்துக்களை,